திருக்குறள்

1178.

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணா தமைவில கண்.

திருக்குறள் 1178

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணா தமைவில கண்.

பொருள்:

என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!.

மு.வரததாசனார் உரை:

உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

சாலமன் பாப்பையா உரை:

உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.!.